திண்டுக்கல், பிப். 5 –
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் பண்ணைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள 112 ஆண்டுகள் பழமையான ஆலடிப்பட்டி 24 மனை தெலுங்கு செட்டியார்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீஹரிபஜனை மடாலய இராமர் கோவிலின் 3 வது கும்பாபிஷேக திருவிழா நாளை பிப் 6 ஆம் தேதி காலை 10.30 முதல் 11 மணிக்குள் மேஷ லக்கனத்தில் பார்த்தசாரதி பட்டர் ஸர்வசாதகம் வெங்கடேஷ் பட்டாச்சாரியர் அவர்கள் தலைமையில் ஆகம விதிகளின் முறைப்படி நடைப்பெறுகிறது.
இக் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கான கோவில் வேலைகள் கடந்த சிலமாதங்களாக நடைப்பெற்று முடிவடைந்த நிலையில் கடந்த பிப்.3 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் ஸ்ரீஹரிபஜனை மடாலயத்தில் பஜனை பாடல் பாராயணத்துடன் தொடங்கியது.
மேலும், கடந்த பிப் 4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மேல் பல புண்ணிய ஸ்தலங்களிருந்து தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டு அருள்மிகு ராஜகுல வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று ஸ்ரீஹரிபஜனை மடாலயம் வந்தடைந்தது. அதன் பின் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அன்று மாலை 5 மணிமுதல் மங்கள இசை, புண்ணிய தீர்த்தம் ராமர் கோயில் வந்தடைந்து அனுக்ஞை, பூர்வாங்கம், ஆச்சார்யவர்ணம், விஸ்வக்ஸேண பூஜை, மகா சங்கல்பம், வருண கலச புண்யாக வாகனம், பஞ்சகவ்யம், பேரி பூஜை, வாஸ்து ஹோமம், பூர்ணஹூதி, வாஸ்து சாந்தி, மஹா தீபாராதனை வாஸ்து பிரவேசபலி நடைப்பெற்றது.
இரவு 7 மணிமுதல் மஹாலட்சுமி பூஜை, தீபாரதனை பிரசாதம் விநியோகம் கோஷ்டி சாத்து முறை நடைப்பெற்றது.
இன்று காலை சனிக்கிழமை அதிகாலை 6 மணிமுதல் இரண்டம் காலபூஜை, மங்கள இசை, திருப்பள்ளியெழுச்சி, சுப்ரபாதம், வேதபாராயணம், நாலாயிர திவ்யப்ரபந்தம் பாராயணம் நடைப்பெற்றது. மேலும் அதனைத்தொடர்ந்து காலை 7 மணிமுதல் மஹா கணபதி பூஜை, கும்ப அலங்கார வருண கலச புண்யாக வாசனம், பூமி பூஜை, த்வார பூஜை, பாலிகா பூஊஐ, வேதிகார்ச்சனை அக்னி பிரதிஷ்டை, காயத்ரி ஹோமங்கள் நடைப்பெற்றது.
தொடர் நிகழ்ச்சியாக காலை 9 மணிமுதல் 11 மணிவரை மஹாசுதர்ஸண ஹோமங்கள் பூர்ணஹூதி, நைவேத்தியம், த்வாரபலி, தீபாராதனை, சாற்றுமுறை பிரசாத விநியோகம் சாத்துமுறை நடைப்பெற்றது.
மேலும் இன்று மாலை 4.30 மணிமுதல் மங்கள இசை, த்வார பூஜை, வேதிகார்ச்சனை, அக்னிபிரதிஷ்டை ஸ்ரீராம காயத்ரி ஹோமங்கள், மால மந்திர ஹோமங்கள், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமங்கள், பூர்ணாஹூதி, நைவேத்தியம், த்வாரபலி, தீபாரதனை, சாற்றுமுறை பிரசாதம் விநியோகம் நடைப்பெறும்.
இதனைத் தொடர்ந்து நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிமுதல் நான்காம் கால யாக பூஜை, மங்கள் இசை, விஸ்வஸேண பூஜை, வருண கலச புண்யாக வசானம், சுப்ரபாதம், திருப்பள்ளியெழுச்சி, வேதபாராயணம் நடைப்பெறும்.
அதனைத் தொடர்ந்து காலை 7 மணிமுதல் 9 மணிக்குள்ளாக கோபூஜை, சப்தகன்னி பூஊஐ, சுவாஸினி பூஜை, த்வாரபூஜை,வேதிகார்ச்சனை, மூலமந்திர,காயத்திமந்திர,மாலமந்திரஹோமங்கள் நடைப்பெறும்.
காலை 10 மணி முதல் 10 30 மணிக்குள் நாடி சந்தானம் ஸ்பர்ஸாஹூதி, மஹா பூர்ணஹூதி, நைவேத்தியம், த்வாரபலி தீபாராதனை, கடங்கள் புறப்பாடு நடைப்பெறுகிறது.
இதனைத் தொடர்ந்து நாளை காலை 10.30 மணிமுதல் 11 மணிக்குள்ளாக மேஷ லக்கனத்தில் ஹரி பஜனை மடாலய ஸ்ரீராமர் ஆலய சம்ரோக்ஷன மகா கும்பாபிஷேகம் நடைப்பெறுகிறது. அதனைத் தொடர்ந்து மஹாதீபாராதனை விஸ்வரூப அலங்கார தரிசனம், நைவேத்தியம் செய்யப்பட்டு கோஷ்டி சாற்றுமுறை மங்கள சாசகம் நடைப்பெறுகிறது.
மஹா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து காலை 11 மணிமுதல் மாபெரும் அன்னதானம் நடைப்பெறுகிறது.
இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஆலடிப்பட்டி 24 மனை தெலுங்கு செட்டியார்கள் அருள்மிகு ஸ்ரீஹரிபஜனை மடாலயம் ஸ்ரீராமர் கோவில் நிர்வாக குழுவினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
மேலும் இந்நிகழ்ச்சிகளுக்கு உள்ளூர் மற்றும் மாவட்ட அளவிலான பலதுறை அரசு அலுவலர்கள் சிறப்பாகவும் பாதுகாப்புடனும் நடப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர்.