சென்னை, ஜன. 17 –

தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 157.20 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது. இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 16,56,341 கொவிட் சிகிச்சை பெறுபவர்கள் 4.43%ஆக உள்ளனர். குணமடைந்தோர் விகிதம் தற்போது 94.27% சதவீதம் கடந்த 24 மணி நேரத்தில் 1,51,740 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,52,37,461 என அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,58,089 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 8,209 ஒமிக்ரான் பாதித்தவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் இது நேற்றை விட 6.02 சதவீதம் அதிகமாகும் தினசரி பாதிப்பு விகிதம் 19.65 சதவீதம் ஆகும் வாராந்திர பாதிப்பு விகிதம் 14.41 சதவீதம் ஆகும் இதுவரை மொத்தம் 70.37 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 13,13,444 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here