சென்னை, அக். 6 –
தமிழக கடலோர பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிக் காரணமாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழைப் பெய்யக் கூடும் என்றும் நீலகிரி, கிருஷ்ணகிரி, மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிக கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதனைப் போன்று வேலூர், ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் லேசானதும் மிதமான அளவிலும் மழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையைப் பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைப் பெய்ய கூடும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப நிலையை பொருத்தவரையில் அதிகப்பட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று அச்செய்திகுறிப்பில் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடல் பகுதிகளில் உள்ள லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு கடல் பகுதிகளில் சூறாவெளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் ஆதலால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு வானிலை தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.