திருவள்ளூர் செப். 30 :
திருவள்ளூர் தகனிக்கோட்டை தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (45).அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டை பூட்டி விட்டு வேலை காரணமாக வெளியே சென்றிருந்தார். இரவு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 சவரன் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.78 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.
இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் வேல்முருகன் புகார் செய்தததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.