pic copy file :
திருவண்ணாமலை அக்.10-
திருவண்ணாமலையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்வு முகாம் வட்ட வழங்கல் அலுவலர் அ.உதயகுமார் தலைமையில் நேற்று நடந்தது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின் பேரில், மாவட்ட வழங்கல் அலுவலர் கணேஷ் அறிவுறுத்தலின் பேரில் திருவண்ணாமலை வட்ட வழங்கல் அலுவலகத்தில் நேற்று மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்வுமுகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை வட்ட உணவு பொருள்வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நடந்த இந்த முகாமுக்கு வட்ட வழங்கல் அலுவலர் அ.உதயகுமார் தலைமை தாங்கினார்.
இம்முகாமில் திருவண்ணாமலை வட்டத்தைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர்கள் கலந்துகொண்டு புதிய குடும்ப அட்டை, பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல் என மனு கொடுத்தனர். இம்முகாமில் வருவாய் ஆய்வாளர்கள் திருநாவுக்கரசு, தினேஷ் பாபு, உதவியாளர் மைதிலி உட்பட பலர் கலந்து கொண்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய முகாமானது மாலை 5 மணி வரை நடைபெற்றது.