கும்பகோணம், செப் . 27 –
கும்பகோணம் ரயில் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை குறைக்க வலியுறுத்தியும் ஒன்றிய அரசைக் கண்டித்து ரயில் மறிப்பு போராட்டத்தில் 50 க்கும் மேற்பட்டோர் ஈடுப்பட்டனர்.
இன்று நாடு தழுவிய அளவில் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் ஒரு பகுதியாக கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 50 க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இப்போராட்டத்தில் ஒன்றிய அரசுக்கு கண்டனக் குரல்களை எழுப்பினர் .மேலும் அவர்கள் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்த வேண்டும், வேலை வாய்ப்பை பெருக்க வேண்டும், பெட்ரோல் -டீசல்- சமையல் எரிவாயு விலைகளை குறைக்க வேண்டும், விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்ட திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும், மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி திட்டத்தை ஆண்டுக்கு 200 நாட்களாக உயர்த்த வேண்டும் ,குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் எதிர்க் கட்சித் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சியினர் பாரத் பந்த் என்ற பெயரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கும்பகோணம் ரயில் நிலையத்தில் மைசூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் விரைவு ரயில் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியலில் ஈடுபட முயன்ற 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். .