சென்னை, செப் . 17 –

செப் – 17 தந்தை பெரியாரின் 143 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அந் நாளை சமூக நீதி நாளாக இனி கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அந் நாளில் சமூக நீதி நாள் உறுதி மொழியை அரசு அலுவலகங்களில் அலுவலர்கள் அனைவரும் ஏற்க வேண்டும் எனவும் தமிழக அரசு கடந்த சட்டமன்ற தொடரில், சட்டப் பேரவையில் முதலமைச்சர் 110 விதியின் கீழ் ஆணைப்பிறப்பித்து இருந்தார்.

இந் நிலையில் இன்று தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் உள்ள அலுவலர்கள் மற்றும் பல்வேறு கடசியினர் மற்றும் ஆங்காங்கே சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என அனைத்து தரத்து தமிழக மக்களும் சமூக நீதி நாள் உறுதி மொழியேற்றனர்.

இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், அரசு துறைச் சார்ந்த அனைத்து அரசு உயர் அலுவலர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் சமூக நீதி நாள் உறுதி மொழியினை ஏற்றனர்.

அதற்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் மக்கள் மன்றம், நீதி மன்றம், சட்ட மன்றம், நாடாளுமன்றம் என அனைத்து மக்கள் மனங்களிலும் சமூக நீதியை விதைத்த பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியாரை அவர் பிறந்த நாளான இன்று வணங்குகிறோம். அவர் பிறப்பால்தான் தமிழினம் புதுப்பிறப்பை அடைந்தது. மானமும் அறிவும் உள்ள சமுதாயம் ஆனது.

ஒடுக்கப்பட்டோர் ஒளி பெற்றார்கள், பெண்ணினம் மேன்மை அடைந்தது. அத்தகைய பேரொளி பிறந்த நாளில் சமூக நீதி உறுதி மொழியை எடுத்துக் கொண்டேன். தமிழ் நாடே எடுத்துக் கொண்டது.

சமநிலைச் சமூகம் உங்கள் பாதையில் அமைப்போம் அய்யா !

என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here