திருவண்ணாமலை, செப்.10-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு தமிழ்நாடு பாரதிய கிசான் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஆர்.பச்சையப்பன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆர்.சுப்பிரமணியன் துணை செயலாளர் எஸ்.பச்சையப்பன், மாவட்ட பொருளாளர் எஸ்.ஏழுமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.பரமன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மாநில அமைப்பாளர் சி.எஸ்.குமார், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.ராமமூர்த்தி, கோட்ட பொருப்பாளர் டி.ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வேளாண் பொருட்களுக்கும் லாபகரமான விலை அரசு நிர்ணயிக்க வேண்டும்.
எம்எஸ்பி சட்டப்பூர்வமாக உரிமையாக்கப்பட வேண்டும். உற்பத்தி செலவின் அடிப்படையில் எம்எஸ்பி நிர்ணயம் செய்யப்பட வேண்டும். கொள்முதல் நிலையங்கள் திறம்பட செயல்படுத்திட வேண்டும்.. வேளாண் உற்பத்தி இடுபொருட்கள் மாநில விலையில் கிடைக்கப்பட வேண்டும். பயிர்காப்பீட்டு திட்டம் எல்லா வேளாண் பொருட்களுக்கும் வழங்கிட வேண்டும். தேங்காய் வாழை எம்எஸ்பியில் சேர்க்கப்பட வேண்டும் உழவர் அட்டை எல்லா விவசாயிகளுக்கும் உடனடியாக வழங்கப்பட வேண்டும். அனைத்து கால்நடைகளுக்கும் மாநில விலையில் காப்பீடு வழங்கிட வேண்டும். விவசாயிகளுக்கு பென்ஷன் திட்டம் அமுல்படுத்திட வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குளங்கள் ஆறுகள் தூர்வாரப்பட வேண்டும் தோட்டப் பயிர் பூக்கள் பழங்கள் இவற்றிற்கான குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்கு ஒன்றிய வாரியாக செயல்படுத்திட வேண்டும் பிரதமர் சம்மன் நிதி அனைத்து விவசாயிகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் திட்டங்கள் தாமதமில்லாமல் அமுல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கிசான் சங்கத்தினர் கோஷமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுபபினர் கே.சக்கரபாணி, மாவட்ட துணை செயலாளர் எஸ்.பிரபாகரன், மாவட்ட துணைத் தலைவர் ஆர்.பட்டாபி, ஒன்றிய செயலாளர் ஆர்.பலராமன், ஒன்றிய தலைவர்கள் பி.குப்புசாமி, ஆர்.ராஜா உள்பட மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இயற்கை விவசாய அமைப்பாளர் எஸ்.கோபால் நன்றி கூறினார்.