காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டை ஊராட்சியை காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இனைப்பதற்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
காஞ்சிபுரம், செப். 6 –
காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டை ஊராட்சியை, காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு, அரசு விலக்கு அளிக்க வேண்டும் என, ஏராளமான கிராம மக்கள் பெண்கள், ஆண்கள் என ஒன்று கூடி, முத்தியால்பேட்டை ஊராட்சி அலுவலகத்தின் முன் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் முத்தியால்பேட்டை ஆர்.வி ரஞ்சித்குமார் தலைமையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும், முதல்வர் தனிப்பிரிவிற்கு, 100 நாள் பணியாளர்கள் தனித்தனியாக பதிவு தபால் அனுப்பவும் உள்ளனர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட 100 நாள் வேலை செய்யும் கிராமத்துப் பெண்கள் கலந்து கொண்டனர்