சென்னை, ஆக. 18-

இன்று சென்னை தலைமை செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடியை பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து, அரசு உதவிப் பெறும் கல்லூரிகளில் காலி பணியிடங்களுக்கு பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு 1 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி பணி நியமனம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

அதனை ஏற்றுக் கொண்ட அமைச்சர் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவரின் உடனடி உத்தரவைப் பெற்று, கல்லூரிக் கல்வி இயக்குனர் வாயிலாக அனைத்து அரசு உதவிப் பெறும் கல்லூரிகளுக்கு சுற்றரிக்கை அனுப்ப ஆவன செய்வதாக தெரிவித்தார்.

உடன் உயர் கல்வித் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் உடன் இருந்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here