சோழிங்கநல்லூர், ஆக 7 –

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 3ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று அவரது திருவுருவ படத்திற்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்திய சோழிங்கநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த்ரமேஷ் பிரியாணி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட மடிப்பாக்கம்,  உள்ளாகரம், புழுதிவாக்கம், பள்ளிகாரணை, ஜல்லடியன் பேட்டை உள்ளிட்ட பகுதியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 3ம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் திமுக சார்பில் கருணாநிதி அவர்களின் திருவுருவ படத்திற்கு சோழிங்கநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த்ரமேஷ் அவர்கள் மாலை அனிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு (பிரியாணி),  பிரெட், தண்ணீர் பாட்டில், பெண்களுக்கு புடவை, பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு பேனா போன்ற நலத்திட்ட உதவிகளை திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த்ரமேஷ் அவர்கள் வழங்கினார். 

 

உடன் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி செயலாளர் எஸ்.வி.ரவிசந்திரன், வட்ட செயலாளர்கள் திவாகர், மடிப்பாக்கம் சி.செல்வம், பாபு, ரவி, லட்சுமிபதி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்துக் கொண்டனர். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here