முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 3 வது நினைவுத் தினமான இன்று அவரின் புகழை நினைவுக் கூறும் வகையில் தமிழகம் முழுவதும் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை மற்றும் மலர்கள் தூவி மரியாதைச் செலுத்தி அந்தந்தப் பகுதி ஏழை எளிய மக்களுக்கு அரசு சார்பிலும். திமுக கட்சியினர் சார்பிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவரது நினைவுப் போற்றலை சிறப்பித்து வருகின்றனர். அதனை மெய்பிக்கும் வகையில் சென்னை வேளச்சேரி கிழக்குப் பகுதி 175 வது வட்ட திமுக சார்பில் ஏழை எளியோர்க்கு வீட்டு உபோயோகப் பொருட்களை வழங்கி சிறப்பித்துள்ளனர்.

சென்னை, ஆக 7 –

சென்னை வேளச்சேரி கிழக்கு பகுதி 175வது வட்ட திமுக சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 3ம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் வாஷிங் மெஷின், மிக்சி, மற்றும் கிரைண்டர் ஆகியவற்றை வழங்கினர். 

சென்னை தெற்கு மாவட்டம் வேளச்சேரி கிழக்கு பகுதி 175வது வட்ட திமுக சார்பில் வட்ட செயலாளர் மு.தனசேகர் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வேளச்சேரி கிழக்கு பகுதி செயலாளர் துரை கபிலன் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அனிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

பின்னர், ஏழை எளியோர் பயன் பெறும் வகையில் அடையார் காந்தி நகரில் வாஷிங் மெஷின், மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பகுதி செயலாளர் துரைகபிலன் வழங்கினார். 

உடன் வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர் பி.ஜே.பாஸ்கர், மாவட்ட பிரிதிநிதி செல்வம், பகுதி பிரிதிநிதி சின்னதம்பி, பகுதி துணை செயலாளர் ரவிகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here