திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் இல்லாமல் 5 வது நாட்களாக நடந்த ஆடிப்பூர திருவிழா நடந்ததால் பெண் பக்தர்களிடையே இது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்திவுள்ளது.
திருவண்ணாமலை, ஆக.7-
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். தற்போது ஆடி மாதத்தை முன்னிட்டு கடந்த 1 ந் தேதி முதல் ஆடிப்பூரம் திருவிழா நடை பெற்றுவருகிறது. விழாவை முன்னிட்டு உண்ணாமலையம்மன் சன்னதி முன்புள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, பிரகாரத்தில் சுவாமி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
ஆடிபூரம் திருவிழாவில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். ஆனால், தற்போது கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
5வது நாளன்று பராசக்தி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் ரிஷப வாகனத்தில் பராசக்தி அம்மன் 5ம் பிரகாரத்தில் வலம் வந்தார். விநாயகரும் பல்லக்கில் எழுந்தருளினார். அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 5 நாட்களாக நடைபெற்ற ஆடிபூரம் திருவிழா நிகழ்ச்சிகளில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப் படவில்லை.
சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். இது பெண் பக்தர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.