பொன்னேரி ஆகஸ்ட் 6 –
புறநகர் மின்சார ரயில்கள் தாமதமாக வருவதால் கும்மிடிப்பூண்டி சென்னை மூர்மார்க்கெட் செல்லும் ரயில் சென்னை இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயிலை மறித்து பயணிகள் பொன்னேரி ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தினர் டிவிஷனல் மனேஜர் எம்.எல்.ஏ. நேரில் வந்து சமாதானம் செய்தனர். இதனால் சுமார் 4 1/2 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதித்தது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வழியாக கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னைக்கு தினமும் சுமார் அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்திற் குள்ளாக தொடர்ந்து மின்சார ரயில் வழக்கமாக செல்வது வழக்கம் இதே போல் சென்னை மூர் மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூ ண்டிக்கு மின்சார ரயில் இயக்கப் படுகின்றன இந்த ரயில்கள் தினமும் காலை, மாலையில் தாமதமாக வருவதால் பயணிகள் பெரும் அவதிக்குள் ளாகின்றனர் இது குறித்து புகார் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடு க்கப்பட வில்லை என கூறப்படுகிறது
இந் நிலையில் இன்று காலையில் வழக்கம் போல் புறநகர் மின்சார ரயி ல்கள் தாமதமாக வந்தது இதனால் ஆத்திரம் அடைந்த ரயில் பயணிகள் சுமார் 8 மணியளவில் திடீரென்று பொன்னேரி ரயில் நிலையத்தில் மறி யல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் தென்னக ரயில்வே டிவிசனல் மனேஜர் சச்சின் குலேகர், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் காங்கிரஸ் கட்சி மாநில துணைத் தலைவர் டி.எல். சதாசிவலிங்கம் திமுக ஒன்றிய செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ராமேஷ்ராஜ், ஆகியோர் நேரில் வந்து விசாரண நடத்தினார் அப்பொழுது பயணிகள் ரயில் நிலையங்களில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை இதனால் நோயாளிகளும் பயணிக ளும் பெரும் அவதிப் படுகின்றனர். மேலும் புறநகர் மின்சார ரயில்கள் பெரும் தாமதமாக வருகிறது உள்ளிட்ட பல்வேறு புகார்களை பயணிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதனால் சுமார் 4 1/2 மணி நேரத்துக்கும் மேல் ரயில் போக்குவரத்து இரு மார்க்கத்திலும் பாதிக்கப்பட்டது. மேலும் வட மாநிலங்கலிருந்து சென்னை வந்த எகஸ்பிரஸ் ரயில்கள் கும்மிடிப் பூண்டி ரயில் நிலையத்திலும் பொ ன்னேரி வரும் வழியிலேயே நிறுத்தப் பட்டன. இதே போல் சென்னையில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக கிளம்பியதாக கூறப்படுகிறது.