திருவண்ணாமலை, ஆக 1 –
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை, பொது சுகாதாரம் மற்றும் வருவாய்த்துறை சார்பில் நடைப்பெற்ற கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பேரணியை பெ.சு.தி. சரவணன் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார். இப்பேரணியில் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் ஏராளமான அத்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துக் கொண்டனர்.