கும்பகோணம், பிப். 13 –

கும்பகோணம் அடுத்துள்ள திருவிடைமருதூர், திருப்பணி பேட்டை கீழத்தெருவில் அமைந்துள்ள ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது. அக்கோவில் வாசலில் வைத்திருந்த 1அடி உயரமுள்ள விநாயகர் சிலை ஒன்றை காணவில்லை.  இந்த கோவிலில் திருமங்கலகுடி ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்த ரத்தினசபாபதி மகன் கார்த்திகேயன் என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார்.

   இவர் இரண்டு நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் கோயிலுக்கு வரவில்லை இந்நிலையில் இன்று மதியம் ஊர் மக்கள் எதேச்சையாக பார்க்கும் போது சிலை காணவில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் அவ்வூர் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here