சென்னை ஜூலை 31 –
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தலைமை அலுவலகத்தில் கடந்த 29 ஆம் தேதி மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆய்வுத் தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தலைமையில் நடைப்பெற்ற சென்னை வடக்கு,மத்திய,மேற்கு, தெற்கு 1 & 2 மின் பகிர்மான வட்டங்கள் தொடர்புடைய மேற்பார்வை பொறியாளர்கள் , செயற் பொறியாளர்கள் மற்றும் உதவிச் செயற் பொறியளர்கள் உடனான ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது.
அக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் அடுத்த ஐந்தாண்டிற்கான திட்டங்கள் குறித்து முதலமைச்சரிடம் ஒப்புதல் பெறக்கூடிய நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். 5 ஆண்டுகளில் புதிய மின் உற்பத்தியை பெருக்க வேண்டும். மின் வினியோக கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் அதை எந்தப்பிரச்சினைகளும் வராமல் திட்டம் வகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் 5 ஆண்டிற்கான திட்டத்தை ஒருவாரத்தில் அளிக்க வேண்டும் என்றும் அளிவுறுத்தியுள்ளார்.
மேலும் பத்திரிக்கைகள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக வரும் புகார்களையும், அலைப்பேசியில் பொதுமக்கள் அளித்திடும் மின்சாரம் தொடர்பான புகார்களை உடனடியாக ஆய்வு மேற் கொண்டு தீர்வு ஏற்படுத்திய பின் தகவல்களை அவர்களுக்கு திரும்ப அளித்திடுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் கைப் பேசி எண் பதிவு செய்யப்பட்ட மின் நுகர்வோர்களுக்கு மின்னகத்தின் புகார் மையத்தின் தொடர்பு எண் 94987 94987 என்ற எண்ணை அணைவருக்கும் குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும் என்றும் அனைத்துப்பிரிவு அலுவலகங்களிலும் மின்னகம் புகார் மைய எண் பொதுமக்களின் பார்வையில் தெரியும் படி அமைக்க வேண்டும் என்றும் மேலும் மின் கட்ண ரசீதுகளில் மின்னகத்தைக் குறித்தும் புகார் எண் 94987 94987 குறித்தும் தகவல்கள் அச்சிட்டு மின் நுகர்வோர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் அவ்வாய்வுக் கூட்டத்தில் சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்னக புகார் மையத்தில் பெறப்பட்ட மின் தொடர்பான புகார்கள் குறித்தும் அப்பகுதி அலுவலர் துரித நடவடிக்கை எடுப்பது குறித்தும் அப்பகுதியிளில் மின் தடங்கல் ஏற்படுவதற்கான காரணம் குறித்தும் ஆய்வு மேற் கொண்டார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான் கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தினசரிப் பணிகள் குறித்த விபரம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக இணையத்தளத்தில் தினமும் பதிவேற்றம் செய்யப்படவும், மேற்கொள்ளப்பட்ட முக்கிய பணிகள் குறித்து அறிக்கைகள் பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டு வரும்படி பத்திரிக்கை மற்றும் சமூக வலை தளங்களுக்கு வழங்கவும் அறிவுரை வழங்கினார்.
அரசுக்கும் முதலமைச்சருக்கும் நற்பெயர் உருவாக்க வேண்டும் நம்முடைய செயல்பாடுகளில் கவனமாக இருந்து நாம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்திற்கு பின் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையத்தை ஆய்வு செய்து வரப்பெற்ற புகார்களையும் அதனை நிவர்த்தி செய்த விவரங்களையும் கேட்டறிந்து புகார்கள் மீது தீர்வுக்காண எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அறிவுரையும் வழங்கினார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.