திருவண்ணாமலை, ஜூலை 30-
திருவண்ணாமலை ராமகிருஷ்ணா ஹோட்டலில், உணவு பாதுகாப்புத் மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் எண்ணெயிலிருந்து பயோ-டீசல் தயாரிக்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ் துவக்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மு. பிரதாப் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், வணிகர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் வணிகர்கள் கலந்து கொண்டனர்.
சமையலுக்கு உபயோகப்படுத்திய எண்ணெய் மீண்டும் மீண்டும் வறுக்கும் போது மனித நுகர்வுக்கு 25 சதவீதத்திற்கு மேலாக உள்ள மொத்த துருவ கலவைகள் பயன்படுத்தும் போது பாதுகாப்பற்றதாக மாறிவிடுகிறது. பலமுறை உபயோகப்படுத்திய எண்ணெய் பயன்படுத்தும் போது எண்ணெய்யில் உள்ள ஊட்டசத்து உள்ளிட்ட பண்புகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக புற்று நோய், இதய பாதிப்பு, நெஞ்சு எரிச்சல், உயர் இரத்த அழுத்தம், உடன் பருமன், ஞாபகமறதி, கொழுப்பு மற்றும் கல்லீரல் சம்பந்தமான உடல் உபாதைகள் ஏற்பட முக்கிய காரணமாகி விடுகிறது. இதை தவிற்கும் பொருட்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய துறை மற்றும் பெட்ரோலியம் துறை இணைந்து உபயோகப்படுத்திய எண்ணெய்யினை பயோ-டீசல் ஆக மாற்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே நாடு முழுவதும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய துறையால் அங்கீகரிக்கப்பட்ட 33 இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய துறை தயாரிப்பாளர்கள் மற்றும் 19 அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் பயன்படுத்திய எண்ணெய் வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பயன்படுத்திய எண்ணெய் வாங்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான தனலட்சுமி கெமிக்கல் இன்டஸ்ட்ரி லிமிடெட் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 50 லிட்டர்களுக்கு மேல் பயன்படுத்தப்படும் அனைத்து உணவகங்கள், இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கும் கடைகள் மற்றும் துரித உணவகங்கள் ஆகியவைகளில் பயன்படுத்திய சமையல் எண்ணெய்களை மறுமுறை உபயோகப்படுத்தாமல் மறுசுழற்சிக்கு, மாவட்டத்தில் உள்ள 70-க்கும் மேற்பட்ட உணவகங்கள், இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கும் உரிமையாளர்கள் மூலமாக பயன்படுத்திய எண்ணெய் அளிக்கப்பட்டு, எண்ணெயிலிருந்து பயோ-டீசல் தயாரிக்கும் திட்டம் மாவட்ட ஆட்சியரால் துவக்கி வைக்கப்பட்டது.