திருவண்ணாமலை, ஜூலை.26-

அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரது ஆணைக்கிணங்க வரும் 28ந் தேதி சர்வாதிகாரி செவிக்கு சென்று சேரும் வகையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் உரிமை முழக்கங்களை எழுப்ப வேணடும் என முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ சூளுரை ஏற்று பேசினார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் வரும் 28ந் தேதி கழகத்தின் சார்பில் தமிழகத்தில் நடைபெறும் உரிமை முழக்கம் போராட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது கூட்டத்திற்கு தலைமையேற்று முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ ஆலோசனை வழங்கியஅவர் வரும் 28ந் தேதி திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் உள்ள நகராட்சி பேரூராட்சி ஊராட்சி பகுதிகளில் கழக நிர்வாகிகள் தங்களது இல்லங்கள் முன்பு சர்வாதிகாரியின் செவிக்கு சென்றுபேரும் வகையில் உரிமை முழக்கங்களை எழுப்ப வேண்டுமென கேட்டுக்கொண்டார்.  இதில் மாவட்ட கழக அவைத் தலைவர் அன்பழகன் மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.நைனாகண்ணு  ஒன்றிய கழக செயலாளர்கள் மாத்தூர் எம்.கலியபெருமாள், ஏ.ஏ.ராமச்சந்திரன், ராஜா (எ) வி.தேவராஜன், டிபிஎன்.பாஷியம், சி.தொப்பளான், சி.மனோகரன், எம்.சி.அசோக், அமுதா அருணாசலம் ஜெயசுதா மாவட்ட கழக இலக்கிய அணி செயலாளர் இ.என்.நாராயணன்  பேரவை மாவட்ட இணை செயலாளர் கராத்தே என்.பாண்டு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சாந்தி கண்ணன் திருவண்ணாமலை நகர கழக அவைத் தலைவர் எஸ்.பழனி, உள்பட மாவட்ட ஒன்றிய பேரூர் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நீட்தேர்வை ரத்து செய்வதாக தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி அளித்த திமுக தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களை ஏமாற்றும் வகையில் நீட்தேர்வை ரத்து செய்யாததை  கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் கழக நிர்வாகிகள் இல்லங்கள் முன்பு உரிமை முழக்கங்களை எழுப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here