சத்யா என்பவரின் குடும்பப் பிரச்சினையை சமரசமாக பேசி தீர்த்து வைக்கச் சென்ற வழக்கறிஞரை கத்தியால் வெட்டிய 6 பேர் கொண்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், உடல்கூறு பரிசோதனை செய்து தர வேண்டியும் காவல் நிலையத்தில் அவரது மனைவி புகார் மனு அளித்துள்ளார்.
திருவள்ளூர் ,ஜூலை,21-
திருவள்ளூர் மாவட்டம் கோப்பூர் வெள்ளரித்தாங்கல் கிராமம் அம்பேத்கார் தெருவில் வசிக்கும் வழக்கறிஞர் வெங்கடேசன் என்பவரின் மனைவி காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார் அதில் தனது கணவர் வெங்கடேசன் திருவள்ளூர் நீதி மன்றத்தில் வழக்கறிசராக பணியாற்றி வருகிறார். அவர் சம்பவ நாளன்று சத்தியா என்பவரின் குடும்ப பிரச்சினை காரணமாக அவர் வீடு வரை சென்று பேசித் தீர்த்து வைத்து விட்டு வருவதாக கூறிச் சென்றார் . வெகு நேரமாகியும் வீடு திரும்பாத தால் அவரது தொலைப் பேசிக்கு தொடர்பு கொண்ட போது , அவர் எந்த வித பதிலும் அளிக்க வில்லை மீண்டும் வெகு நேரம் கழித்து 11 மணியளவில், சத்தியா என்பவர் தனது கணவரின் போனில் இருந்து தொடர்புக் கொண்டு சமரசம் பேச வந்த தங்கள் கணவரை என்னுடைய உறவினர்கள் எங்கள் இருவரையும் வெட்ட வந்த தாகவும் நாங்கள் இருவரும் வீட்டினுள் இருப்பதாகவும் எங்களை காப்பாற்றுங்கள் என கூறினாராம் . உடனே தானும் கணவரின் நண்பர்களும் சம்பவ இடத்திற்கு சென்றோம் . நாங்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து குரல் எழுப்ப கணவர் வீட்டுக் கதவை திறந்து வெளி வரும் சமயத்தில் மறைந்திருந்த எதிரிகள் அவரை மீண்டும் வீட்டினுள் இழுத்து சென்று கத்திகளால் இத்தோடு ஒழிந்து போட என வெட்டினார்கள். அதைக்கண்டு நாங்கள் சத்தம் போட எங்களையும் காத்தியைக் காட்டி மிரட்டி விட்டு தப்பித்து சென்று விட்டனர். வீட்டினுள் சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் இருந்த தனது கணவரை திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் தனது கணவரை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இறந்து போன தனது கணவரின் உடலை உடல்கூறு பரிசோதனை செய்து தன்னிடம் தருமாறு அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் ஆஞ்னேயபுரம் வெங்கடேசன் மனைவியும் தலையில் படு காயத்துடன் திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் சங்கர்,வெங்கடேஷ்,சென்னம்மா,தேவி,சங்கீதா ஆகியோர்களை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.