திருவண்ணாமலை ஏப்.10- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மில்லத் நகர் அருகே அடுத்தடுத்து நடந்த மூன்று வாகன விபத்துகளில் சுமார் 6 பேர் படுகாயமடைந்தனர்.
கனிகாரன் கொள்ளை பகுதியைச் சேர்ந்த துரை என்பவர் செங்கம் பகுதியில் வேலை செய்துவிட்டு இரவு தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் மில்லத்நகரை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது செங்கம் போக்குவரத்து பணிமனைகளில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
இதே போன்று ராமகிருஷ்ணா மடம் அருகே இருவர் இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இவர்களைத் தொடர்ந்து பழையகுயிலம் அருகே  காதர்ஷேக்  என்பவர் வியாபார முடித்துவிட்டு  தள்ளு வண்டியை சாலையில் தள்ளிக் கொண்டிருந்த போது மதுபோதையில் வந்த நபர் ஒருவர்  தள்ளுவண்டி மீது மோதியதில் காதர்ஷேக் மற்றும் விபத்து ஏற்படுத்திய நபர் படுகாயமடைந்தனர் இவர்கள் உட்பட சுமார் ஆறு நபர்கள் செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் இதில் பலத்த காயம் ஏற்பட்டது மூன்று நபர்களை மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ஒரே சாலையில் அடுத்தடுத்து நடந்த 3 சாலை விபத்துகளில் சாலை விதிகளை கடைபிடித்து வாகனங்களை இயக்க தமிழக அரசு எவ்வளவு அறிவுறுத்தினாலும் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் கண்மூடித்தனமாக வாகனத்தை இயக்குவதை இதுபோன்ற விபத்துகள் நடப்பதற்கு முக்கிய காரணமாக விளங்குவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here