திருவள்ளூரில் இயங்கிவரும் தனியார் நிருவனத்தில் விக்னேஷ்வரன் என்பவர் பில்லிங்க் போடும் பணி செய்துவந்துள்ளார். சம்பவத்தன்று பணி முடித்து தனது அறையில் இருந்த போது , அதே நிருவனத்தில் சுமை தூக்கும் பணியில் வேலைப் பார்த்து வந்த தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீஐகுண்டம் தாலூகா இசக்கியம்மாள் புரம் கிராமத்தைச் சேர்ந்த செந்தூர்பாண்டி என்பவரின் மகன் 20 வயதைக் கொண்ட விஜய் என்பவர் என்பவர் குடி போதையில் வந்துள்ளார் .அவரை விக்னேஷ்வரன் ஏன் குடித்துவிட்டு அறைக்குள் வந்தாந் என கேட்டுள்ளார் .அதன் காரணமாக லோடுமேன் அவரை அசிங்கமாக திட்டியும் அருகே இருந்த இரும்பு ராடால் விக்னேஷ்வரன் பின் தலையிலும் வலதுப் பக்க கண் புருவத்திலும் பலமாக தாக்கியுள்ளார். மேலும் இந்த மாதிரியான வேலையை தன்னிடம் வைத்துக் கொண்டால் உனை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். அதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் சண்டையை விலக்கி விட்டு காயம் அடைந்துள்ள விக்னேஷ்வரனை திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். விக்னேஷ்வரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து , விஜய் என்பவரை கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
முகப்பு மாவட்டம் திருவள்ளூர் தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்த ஊழியரை இரும்பு ராடால் தாக்கி படுகாயம் – லோடுமேன் கைது...