இராமநாதபுரம்; நவ. 18-
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரியில் இன்று பள்ளிக்கல்விதுறையின் கீழ் இயங்கிவரும் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பாக நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு எழுத்தறிவு திட்டம் 2019 -2021 திட்டத்தை துவக்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ்,முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் திருவாடனை தொகுதி கருணாஸ், பரமக்குடி சதன்பிரபாகர், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் இயக்குநர் முனைவர் இராமேஸ்வரம் முருகன் ஆகியோர் உள்ளனர்.