ராமநாதபுரம், செப். 9- இந்தியாவில் ஜி.டி.பி. சதவீதம் 9 லிருந்து 5 சதவீதத்திற்கு வீழ்ச்சி அடைந்துள்ள தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது இளைஞர்கள் தீவிரவாதத் திற்கு மாறும் அபாயகர மான சூழலை பா.ஜ அரசு ஏற்படுத்தி விட்டது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.  ராமநாதபுரம் மாவட்டத்தில்  திருப் புல்லாணியில் காங்கிரஸ் கட்சியின்  ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் அமைப்பின் சார்பில் கட்சியின் மாநில பொதுக் குழு உறுப்பினர் தொழிலதிபர் ரமேஷ் பாபு தனது சொந்த செலவில் செட்டி ஊரணியை தூர்வாரி புனரமைப்பு பணிகள் மேற் கொண்டு அப்பகுதி மக்களுக்கு நலத் திட்ட உதவி களை வழங்கும் விழா விற்கு ஏற்பாடு செய்திருந்தார். இவ் விழாவில் கலந்து கொள்வதற் காக வந்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர் களிடம் கூறியாதவது:
சென்னையில் ஐகோர்ட் நீதிபதி ராஜினமா செய்தது வருத்தம் அளிக்கிறது. இந்த பா.ஜ. அரசில் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகள், ஆர்.பி.ஐ. கவர்னர்கள், நீதிபதிகள் பணி செய்ய முடியாமல் தங்கள் பதவியை ராஜினாமா செய்வது தொடர்கிறது. ஜனநாயகத்தின் சிறகுகள் ஒடிக்கப் படுகின்றன. ஊடகங்கள் தான் இதை வெளிப் படுத்த வேண்டும். நிர்வாகமே சரியாக நடைபெற வில்லை. சிதம்பரம் கைது தொடர்பாக அவரே சி.பி.ஐ. ஏதேனும் ஒரு குற்றச் சாட்டையாவது கூறட்டும் நான் வாதாடுவதையே நிறுத்தி விடுகிறேன் என்றார். ஆனால், சி.பி.ஐ. வழக்கறிஞர் களால் பதில் சொல்ல முடிய வில்லை. தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் சரிவர நடைபெற வில்லை. அதனால் தான் காங்கிரஸ் கட்சி மக்கள் நலன் கருதி ஊரணிகள், கண்மாய்களை தூர்வாரும் பணியில் இறங்கி உள்ளோம். இதற்காக சொந்த பணத்தை சுமார் ரூ. 7 முதல் 10 லட்சம் வரை செலவு செய்து பணிகளை செய்து வருகிறோம். தமிழகத்தில் இதுவரை 28 ஊரணிகள் தூர் வாறும் பணி நடந்துள்ளன. பா.ஜ அரசு ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் கடந்த நிலையில் சாதனைகள் இல்லை. மாறாக கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு போன்றவைகள் இறங்கு முகமாகி உள்ளன. நாட்டின் ஜி.டி.பி. சதவீதம் மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தார். அப்போது 9 சதவீதமாக இருந்தது. இது தற்போது 5 சதவீதமாக குறைந்து விட்டது. இதனால் ஒன்றரை லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். பார்லே பிஸ்கட் கம்பெனியை மூடி விட்டனர். இந்த பா.ஜ. அரசு விளம்பரத்தை மட்டுமே மையமாக வைத்து செயல் படுகிறது. பிரதமர் மோடி நன்கு விபரம் தெரிந்த நபரை அருகில் வைத்து கொள்ள தவறி விட்டார். பா.ஜ.வின் ஆட்சியில் பொருளாதார சரிவால் இளைஞர்கள் தீவிரவாதிகளாக மாறும் அபாயகரமான சூழல் உருவாக வாய்ப்பு உள்ளது. கல்லுாரிகளில் சேர இளைஞர்கள் விரும்ப வில்லை. காரணம் ஏற்கனவே படித்த பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு இழந்து நிற்கும் போது படித்து என்ன பயன் என அச்சப் படுகின்றனர். இவ்வாறு கூறினார். செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், ராஜீவ் காந்தி பஞ்சாயத் ராஜ் மாநில ஒருங் கிணைப்பாளர் செங்கம் குமார், எம்.எல்ஏ., மலேசியா பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, மாநில நிர்வாகி செல்லத்துரை அப்துல்லா உட்பட பலர் உடன்இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here