இராமநாதபுரம் செப், 6 –இராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று ஆசிரியர் தின நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் எஸ்தர் வேணி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். பள்ளியில் 39 ஆண்டுகள் பணியாற்றி 1995 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ஆசிரியர் கஸ்துரி சிறப்பு விருந்தினராக பங்கேற்று அவரது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்
முன்னதாக ஓய்வுபெற்ற ஆசிரியர் கஸ்துரிக்கு மாணவ மாணவியர் பூங்கொத்து கொடுத்து கை தட்டி உற்சாக வரவேற்பளித்தனர். அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர், ஆசிரியைகள் வாழ்த்தி பேசினர்.
6,7,8 ம் வகுப்பு மாணவர்கள் ஆசியர்களைப் போன்று பாடம் எடுப்பதை நாடகமாக நடித்துக் காட்டினர். பேச்சு, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது. ஆசிரியர்கள் போன்று மாணவியர் சேலையிலும்…மாணவர்கள் வேஷ்டி, சட்டையிலும் வருகை புரிந்தனர்.
விழாவில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் பர்வீன், பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் நாராயணன், மற்றும் ஆசிரியர்கள் ரமேஸ்வரி, பாமா, விஜயகுமாரி, மீனா, மேகலா, சீனிவாசகன், ஞானசௌந்தரி, பவானி, சுந்தரி, முத்துலெட்சுமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆசிரியை தௌலத் நிஷா பேகம் நன்றி கூறினார்.