ராமநாதபுரம், ஏப். 20-
ராமநாதபுரம் மக்களவை பொது தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேதர்தல் வாக்கு பதிவுக்கு பயன் படுத்தப் பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு அறைகளில் வைக்கப் பட்டு மூன்றடுக்கு காவல் பாதுகாப்பு வளையம் போடப் பட்டுள்ளது.
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருமான வீர ராகவ ராவ் தலைமையில் ராமநாதபுரம் மக்களவை தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் நரேந்திர சிங் பர்மார், பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கான பொது பார்வையாளர் ஆனந்த் ஸ்வரூப் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைக்கப் பட்டு சீல் வைக்கப் பட்டது.
பின் மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ ராவ் தெரிவித்தாவது:
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் 71.37 சதவீதம் வாக்குகள் பதிவாகின. வாக்கு பதிவு அமைதியான முறையில் நிறை வடைந்ததை அடுத்து மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனைத்தும் தேர்தல் வாக்கு எண்ணும் மையமான ராமநாதபுரம் அண்ணா பல்கலை கழக பொறியியற் கல்லுாரி வளாகத்திற்கு சம்பந்தப் பட்ட தேர்தல் மண்டல குழு அலுவலர்கள் மூலமாக காவல்துறை பாது காப்புடன் கொண்டு வரப் பட்டுள்ளது. மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ராம நாதபுரம் பாராளு மன்ற தொகுதிக் குட் பட்ட 6 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தனித் தனியே 6 பாதுகாப்பு அறை களிலும், பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு தனியே ஒரு பாதுகாப்பு அறை என மொத்தம் ஏழு பாதுகாப்பு அறைகளில் வைக்கப் பட்டு தேர்தல் பார்வை யாளர்கள் மற்றும் வேட்பாளர், வேட் பாளர்களின் முகவர்கள் முன் னிலையில் சீல் வைக்கப் பட்டுள்ளது.
பாதுகாப்பு நட வடிக்கைகளை பொறுத்த வகையில் தேர்தல் வாக்கு எண்ணும் மையத் திற்கு மூன்ற டுக்கு காவல் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. மின்னணு வாக்குப் பதிவு இயந்தி ரங்கள் வைக்கப் பட்டுள்ள பாதுகாப்பு அறைகள் (உள்வளாகம்) வாயிலில் தொடர்ந்து 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். அதேபோல தேர்தல் வாக்கு எண்ணும் மைய வெளி வளாகத்தில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பு படை பிரிவினர் மற்றும் மாவட்ட காவல் அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப் பட்டுள்ளனர். அதேபோல் மின்னணு இயந் திரங்கள் வைக்கப் பட்டுள்ள பாதுகாப்பு அறைகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண் காணித் திட நடவடிக்கை மேற் கொள்ளப் பட்டுள்ளது, என மாவட்ட தேர்தல் அலுவலர் வீர ராகவ ராவ் தெரிவித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, உதவி தேர்தல் அலுவலர்கள் மதியழகன், சுமன், ராமன், கயல்விழி, சுப்பையா, கார்த்திகை செல்வி, உதவி செயற் பொறியாளர் குருதி வேல் மாறன் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.