திருவாரூர், ஏப். 04 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே.நாகராஜ்…

திருவாரூர் மாவட்டம், அலிவலம் கிராமத்தில் உதயகுமார் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை பராமரிப்பு பணிக்காக ஆலை ஓட்டம் நிறுத்தப்பட்ட நிலையில் இன்று பாய்லர் சுத்திகரிக்கும் பணியில் பின்னவாசல் பகுதியை சேர்ந்த நாகூரான் 55, பவுத்திரம் மாணிக்கம் பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் 62 இருவரும் ஆசிட் ஊற்றி சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக பாய்லர் வெடித்து சிதறியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்கள் இருவரையும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஊழியர்கள் இருவரும் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பேட்டி : ஜெய்சங்கர் – சக ஊழியர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here