பொன்னேரி, ஜூன். 21 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பொன்னேரியில் இருந்து மீஞ்சூர் செல்லும் நெடுஞ்சாலையில் 50க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி பிரதமர் மோடியின் புகைப்படத்தை தீயிட்டுக் கொளுத்த முற்பட்டனர். உடனே அங்கிருந்த காவல்துறையினர் விரைந்து அவர்களை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ அமைப்பினர் 50 பேரை காவல்துறையினர் கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் போக்கு வரத்தினை ஒழுங்குப்படுத்தினார்கள்.அதன் பின் இயல்பு நிலை திரும்பியது.






















