திண்டுக்கல்:
ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ திண்டுக்கல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ. 50 கோடி செலவு செய்ய திட்டமிட்டுள்ளனர். அவர்கள் எத்தனை கோடி கொடுத்தாலும் அதையும் தாண்டி தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.
அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சி 130 தொகுதியில் தான் வெற்றி பெறும். மாநில கட்சிகள் அதிக இடங்கள் அதிக அளவில் வெற்றி பெறும். காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றும். மாநில கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி இணைந்த அரசு 2019-ல் மத்தியில் ஆட்சி அமைக்கும்.
அ.தி.மு.க. அமைத்துள்ள மெகா கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவும். தமிழகத்தில் புதிதாக வன்முறை கலாச்சாரம் உருவாகி வருகிறது. எங்களை யார் தாக்கினாலும் நாங்கள் அவர்களை திருப்பித்தாக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.