கும்பகோணம், ஜூலை. 09 –

கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக  மண்டல அளவிலான பணிமனைகளில் உள்ள திமுக தொழிற்சங்கமான தொமுச நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் மண்டல கோட்டத்திற்கு உட்பட்ட 22 இடங்களில் இன்று தொமுச நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.  இத் தேர்தலில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் இரு பிரிவுகளாக பிரிந்து A, பிரிவில் தலைவராக சேகரும், செயலாளராக சின்னதுரையும், பொருளாளராக கிருஷ்ணமூர்த்தியும் போட்டியிடுகின்றனர். அதுப்போன்று  B, பிரிவில் தலைவராக சுரேஷூம் செயலாளராக சங்கரனும், பொருளாளராக ஐயப்பனும் போட்டியிடுகின்றனர்.

இத்தேர்தலுக்காக கும்பகோணம் புறநகர் பகுதியில் நான்கு வாக்குச்சாவடிகளும், மற்றும் மயிலாடுதுறை,  சீர்காழி,  சிதம்பரம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, உள்ளிட்ட 22 இடங்களிலும் தொமுச நிர்வாகிகள் தேர்தல் அந்தந்த போக்குவரத்து கழக பணிமனைகளில் உள்ள வாக்குச்சாவடியில்  நடைபெற்றது.

மேலும், இத்தேர்தலில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைப் பெறாமல் இருக்க பலத்த காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டு காவலர்கள் பணியில் ஈடுபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here