சென்னை:
சென்னையை சேர்ந்த 9 வயது சிறுமி ஸ்ரீஹிதா. இந்த சிறுமி சில வாரங்களுக்கு முன், ராயப்பேட்டையில் உள்ள தன் தந்தையின் அலுவலகம் சென்றார்.
அங்கு அவர் போலீசாரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். சிசிடிவி கேமராக்கள் நிறுவுவதன் அவசியம் பற்றி பேசியதை கேட்டார். இதையடுத்து, போலீசாரின் கண்காணிப்பு பணிகளுக்கு தனது சேமிப்பு பணத்தை அளிப்பதாக கூறினார்.
கடந்த சில தினங்களுக்கு முன் தனது தந்தையுடன் காவல் நிலையத்திற்கு சென்ற ஸ்ரீஹிதா, தான் சேமித்து வைத்திருந்த ரூ.1.50 லட்சத்தை போலீசாரிடம் அளித்தார்.
இந்நிலையில், சிறுமியின் செயலைக் கேள்விப்பட்ட சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், சிறுமி ஸ்ரீஹிதாவை நேரில் வரவழைத்து பாராட்டினார்.
சிசிடிவி கேமராக்களை நிறுவுவதற்காக தனது நீண்டநாள் சேமிப்பு பணம் ரூ.1.50 லட்சத்தை அளித்த ஸ்ரீஹிதாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.