நேற்று சென்னைத் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் ( ஆவின் ) பணிக்காலத்தில் உயிரிழந்த 47 பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையும், பேரரறிஞர் அண்ணா  பால் உற்பத்தியாளர்கள் நலநிதித் திட்டத்தின் கீழ் விபத்தினால் உயிரிழந்த பால் உற்பத்தியளர்கள் 44 பயனாளிகளுக்கு ரூ. 1, 04, 25, 833 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை, ஆக. 22 –

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணி புரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 47 பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில் முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளையும், துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பணிப் புரிந்த காலத்தில் உயிரிழந்த ஒரு பணியாளரின் மனைவிக்கு இள நிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணையினையும் வழங்கிடும் அடையாளமாக 10 வாரிசு தாரர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கினார்.

பேரரறிஞர் அண்ணா பால் உற்பத்தியாளர்கள் நலநிதித் திட்டத்தின் கீழ் விபத்தினால் உயிரிழந்த பால் உற்பத்தியளர்களுக்கு ரூ.2.50 இலட்சம் கல்வி உதவித்தொகை, ரூ.25,000 திருமண உதவித்தொகை ரூ. 30,000 விபத்தினால் உயிரிழந்த பால் உற்பத்தியாளரின் ஈமச்சடங்கிற்காக ரு. 5000 என 44 பயனாளிகளுக்கு ரூ. 1,04, 25, 833 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குவதன் அடையாளமாக 5 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். கால்நடை பரமரிப்பு பால்வளம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் தெ.சு.ஜவஹர் ஐ.ஏ.எஸ். ஆவின் மேலாண்மை இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி ஐ.ஏ.எஸ். மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here