வேப்பம்பட்டு, ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (56) .சென்னை பேசின்பிரிட.ஜ் சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடி இணைக்கும் ஊழியராக பணி புரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், வீட்டில் இருந்து வெளியில் வந்த போது தெரு விளக்கு மின் கம்பத்தில் இருந்து அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த போது, மின்சாரம் தாக்கியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
அத் தகவலறிந்து அங்கு வந்த செவ்வாப்பேட்டை காவல் துறையினர் உயிரிழந்த ராஜேஸ்வரியின் சடலத்தை மீட்டு திருவள்ளுர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மின் கம்பி பழுதாகி சீரமைக்கப் படாததாலும், மின்வாரிய அலட்சியத்தாலும் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே பல முறை மின்வாரியத்தில் மீன் வயரை சீரமைத்துதரும்படி புகாரளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
























