திருவள்ளூர், செப். 19 –

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்தில் இன்று நடைப்பெற்ற 132 பயனாளிகளுக்கு விலை இல்லா வெள்ளாடுகள் வழங்கும் விழாவில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி. ஜே. கோவிந்தராஜன் பயனாளிகளுக்கு வெள்ளாடுகளை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் மற்றும் பூண்டி ஒன்றியத்தில் இளம் விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட மகளிர் மற்றும் ஏழ்மை நிலையில் இருக்கும் தாய்மார்களுக்கு தமிழக அரசின் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி பெரிய பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிற்பு அழைப்பாளராக பங்கேற்ற கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் தலைமையேற்று, 132 பயனாளிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா வெள்ளாடுகளை வழங்கினார். மேலும், ஒன்றிய பெருந்தலைவர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் டி எஸ் மூர்த்தி, கால்நடை வட்டார மருத்துவ ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்கள்.

மேலும் இந்நிகழ்வில் பயனாளிகளிடையே உரை நிகழ்த்திய சட்டமன்ற உறுப்பினர். இன்று ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் ஐந்தாடுகள் அடுத்த வருடத்தில் பார்க்கும் போது 15 ஆடுகளுக்கு மேலாக எண்ணிக்கை கூடி அது உங்களுக்கு வருவாய் ஈட்ட கூடிய விதத்தில் இருக்கும் என்பது உறுதியெனக் குறிப்பிட்டார். மேலும் தற்போது பெறப்படும் இவ்வாடுகளை நன்கு பராமரித்து பயன்பெற வேண்டும் என பேசினார். இந்நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here