முன்னேறிய வகுப்பினர்களில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத  இட ஒதுக்கீடு என்பது சரியல்ல… பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  கோரிக்கை.

ராமநாதபுரத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் முகைதீன் பேட்டி
ராமநாதபுரம், ஜூலை 7-
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மத்திய பட்ஜெட்டில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் .இதை விடுத்து முன்னேறியவர்களில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத  இட ஒதுக்கீடு என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  கட்சியின் கோரிக்கையாகும், என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் முகைதீன் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாநில பொதுக்குழு கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது.  தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர்  கே.எம்.காதர் மொகிதீன் தலைமை வகித்தார்.
மாநில துணைத் தலைவர் மவுலானா ஏ.ஷபிகுர் ரஹ்மான் கிரா அத் ஓதினார். மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முகமது அபுபக்கர் எம்எல்ஏ., வரவேற்றார்.
கடந்த 2018 அக்.29 முதல் 2019 ஜூலை 4 ஆம் தேதி வரை மறைந்த முஸ்லிம் லீக் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக போட்டியிட்டு வென்ற நவாஸ் கனி எம்.பி., கூட்டணி வெற்றி வியூகங்கள் வகுத்த திமுக., தலைவர் ஸ்டாலின், தொகுதி தேர்தல் பணிக்குழு தலைவர் மாநில பொருளாளர் ஷாஜஹான், மாநில பொதுச் செயலாளர் முகமது அபூபக்கர் உள்ளிட்ட தேர்தல் பணி குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது . உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  நரிப்பையூர் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை தொய்வின்றி அமல்படுத்த வேண்டும். ராமேஸ்வரம் – அயோத்தி, அஜ்மீர் சூப்பர் பாஸ்ட் ரயில்களை ராமநாதபுரம் ஸ்டேஷனில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க மத்திய அரசு, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் மீதான  இலங்கை கடற்படை தாக்குதல் பிரச்னைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும். ராமநாதபுரத்தில் அரசு மருத்துவ கல்லூரி அமைய தமிழக அரசை வலியுறுத்தல் உள்பட 14  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநில பொருளாளர் ஷாஜகான் நன்றி கூறினார்.
ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி, மாநில துணை தலைவர்கள் முன்னாள் எம்.பி.,  எம்.அப்துல் ரஹ்மான், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.எம்.காதர் மொய்தீன், சேலம் காதர் உசேன்,  திருப்பூர் பி.எஸ்.ஹம்ஸா, அதிரை நஸ்ருதீன், மாநில செயலாளர்கள் நெல்லை அப்துல் மஜீத்,  சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆம்பூர் எச். அப்துல் பாசித், வழக்கறிஞர் ஜீவ கிரிதரன், ஆடுதுறை ஏ.எம். ஷாஜகான், சென்னை கே.எம். நிஜாமுதீன்  உள்பட  கட்சியின் 425 பொதுக்குழு உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர். தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கூறியதாவது: பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மத்திய பட்ஜெட்டில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் .இதை விடுத்து முன்னேறியவர்களில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத  இட ஒதுக்கீடு என்பது வருத்தமளிக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  கோரிக்கை.
திமுக பாரம்பரியத்தில் திராவிட கொள்கைகளை வளர்த்துவரும் தலைமையிலான திமுக.  மாநில இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்து,  அவருடன் இணைந்து  பணியாற்றுவோம்.
திமுக தலைவர் வகுத்துக்கொடுத்த நெறி பாதை திராவிட பாரம்பரியம், கொள்கை பிடிப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றில் ஐந்தாவது தலை முறையாக வேரூன்றி இருக்கிறது என்பதற்கு அடையாளம் தான் உதயநிதி ஸ்டாலினுக்கு மாநில இளைஞரணி பதவி  என்பதாக நாங்கள் நினைக்கிறோம். கொள்கை பற்றுடைய ஒரு குடும்பத்தின் வெளிப்பாடுதான்.
வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  வாக்கு சேகரிப்போம். வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு  உறுதுணையாக இருப்போம்.
எந்த தேர்தலாக ஆனாலும் திமுக தலைமையிலான கூட்டணி  தொடரும்,
இவ்வாறு அவர் கூறினார்.
மாநாட்டில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் பங்கேற்றனர்.  

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here