சென்னை, செப் . 23 –
சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் இன்று நடைப் பெற்ற நிகழ்ச்சியில் , தமிழ்நாடு மின்சார வாரியம் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவற்றின் சார்பில் ரூ. 3025 கோடி மதிப்பிலான ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து 10 விவசாயிகளுக்கு மின் இணைப்பு ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
எரிசக்தி துறையின் 2021 -2022 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில் மாநிலத்தின் விவசாய உற்பத்தினை பெருக்கி விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஒரு லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப் படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி தமிழ்நாட்டிலயே முதன் முறையாக இதுவரையிலும் இல்லாத அதிகப்பட்ச அளவாக இந்த ஆண்டு ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்க முடிவெடுக்கப்பட்டு ரூ. 3025 கோடி மதிப்பிலான இத்திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தபட உள்ளது அத்திட்டத்தினை முதலமைச்சர் இன்று துவக்கி வைத்து விவசாயிகளுக்கு விவசாய மின் இணைப்புக்கான ஆணையை வழங்கி விவசாயிகளிடம் உரையாற்றினார்.
ரூ.1.59 லட்சம் கோடி கடன் சுமையுடனும், ஆண்டுக்கு 16 ஆயிரம் கோடி வட்டிக்கட்ட வேண்டிய நிதி நெருக்கடியோடுதான் தற்போது ரூ.3025 கோடி மதிப்பிலான 1 லட்சம் விவசாய மின் இணைப்புகளை விவசாயிகளின் நலன் கருதி வழங்குகிறோம் – முதலமைச்சர்
ஒரு லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் என்ற இந்தப் புதிய திட்டத்தை இன்றைக்கு நாம் தொடங்கி வைக்கின்றோம். அதிலும் பெரும்பாலும் இலவசமாக வழங்குகிறோம் என்றால், தமிழ்நாடு மின் வாரியம் செழிப்பாக இருக்கிறது என்று யாரும் எண்ணம் கொள்ள வேண்டாம். அது உங்களுக்கே தெரியும். செழிப்பாக இல்லை கடந்த ஆட்சியாளர்கள் சீரழித்து சென்று உள்ளார்கள் என்பது, இதுதான் அதிமுக ஆட்சியினுடைய சாதனை 1.59 லட்சம் கோடி ரூபாய்க்கு கடனில் இருக்கிறது மின்சார வாரியம். ஆண்டுக்கு ரூ.16 ஆயிரம் கோடி வட்டி கட்ட வேண்டிய நிதி நெருக்கடி நிலையில் தமிழக அரசு உள்ளது. என்பதுதான் நிதர்சன உண்மையாகும். இருப்பினும் விவசாயிகளின் நலன் மேம்பாட்டை கருதி தமிழக அரசு இத்திட்டத்தை விவசாயிகளுக்கு வழங்குகிறது.
மேலும், மிக அதிகமான விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்துள்ளார்கள். அவைகள் குறுகியகால ஒப்ந்தங்களாக இல்லாமல் , மிக நீண்ட கால ஒப்பந்தங்களாகவும் போட்டுள்ளார்கள் அதைப் போன்று அடுக்கடுக்காக மின்சாரத்துறைக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் விதமாக அனல் மின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்காக பயன் படுத்தப்படும் நிலக்கரிகள் இருப்பிலும் பல முறைகேடுகளை நடந்துள்ளன. பதிவேட்டிற்கும் கையிருப்பிற்கும் பெரும் வித்தியாசங்கள் உள்ளது. அதிலும் முறைகேடுகள் .அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதைப் போல் கடந்த பத்து ஆண்டு கால அதிமுக ஆட்சியில் கூடுதலாக நிறுவப்பட்ட நிறுவு சக்தி 1481 மெகாவாட் அதில் 1428 மெகாவாட் 2006- 2011 வரையிலான முத்தமிழறிஞர் கலைஞரின் தலைமையிலான திமுக ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்டவை ஆகும். எனவே பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் நிறுவப்பட்ட நிறுவி சக்தி வெறும் 53 மெகாவாட்தான். இப்படி கடந்த அதிமுக ஆட்சியில் மின்சார வாரியத்தின் அவலங்களை சொல்லிக் கொண்டே போகலாம் என்றார்.
ஆனால் தற்போது இந்நிலையில் இருந்து மீட்டுயெடுக்கும் பணியை இந்த அரசு தொடங்கியிருக்கிறது. பராமரிப்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
புதிய மின் திட்டங்களை உருவாக்க திட்டமிட்டுவுள்ளோம். 17 ஆயிரத்து 980 மெகாவாட் மின்சாரத்தை வரும் பத்தாண்டுகளில் தயாரிக்க திட்டப்பணிகள் தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே திட்டமிடுதலில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க சொல்லிவுள்ளோம்.
சூரிய சக்தி மின்சாரத்திற்கு முன்னுரிமை – முதலமைச்சர்
சூரியசக்தி மின்சாரம் தயாரிப்புக்கு முன்னுரிமை வழங்க இருக்கிறோம். அதன் முதல் கட்டமாக திருவாரூரில் முதல் சூரிய சக்தி பூங்கா அமைக்கப் படவுள்ளது. சூரிய மின் உற்பத்தி, புனல் நீரேற்று மின் உற்பத்தி மற்றும் இயந்திர மின் திட்டங்களைத் தொடங்குவதற்கான ஆலோசனைகளை வழங்கவும் ,நிதி தேவையான 1 லட்சத்து 32 ஆயிரத்து 500 கோடி ரூபாயைத் திரட்டுவதற்கும் இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்துடன் கடந்த செப் 6 -2021 அன்று ஒப்ந்தம் போட்டிருக்கிறோம்.
மரபுசாரா எரிசக்தி துறையில் இவ்வளவு பெரிய ஒப்பந்தத்தை போட்ட ஒரே மாநிலம் நம்முடைய தமிழ்நாடு தான் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன் என்றார். எரிவாயு மின் திட்டங்களை எண்ணூரில் அமைக்க சாத்தியக் கூறுகளை ஆராயச் சொல்லி இருக்கிறோம். மின் இழப்பை சரி செய்ய முயற்சிகள் எடுக்கப் பட்டு வருகிறது.
அனைத்துக்கும் மேலாக குறைகளை உடனடியாக தீர்த்து வருகிறோம். ஆட்சி பொறுப்புக்கு வந்த ஒரு மாதத்துகுள் மின்னகம் என்ற குறை தீர்வு மையத்தை நான் தொடங்கி வைத்தேன் . அதில் பதியப்பட்ட புகார்களில் 90 விழுக்காட்டுக்கு மேலான குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. என்பதையும் அப்போது குறிப்பிட்டார்.
மேலும் இன்று விவசாய புதிய மின் இணைப்புப் பெற்றவர்கள் மின்சார சிக்கனத்தை கடைப்பிடிக்கவும், கடந்தகால தவறுகளில் இருந்து இத்துறை மீண்டுவர அதிகாரிகள் மட்டுமல்லாது அனைவரும் ஒத்துழைப்பை வழங்கிட அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மின்சாரம் , மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்., நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, எரிசக்தித் துறை அரசு முதன்மைச் செயலளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.