ராமநாதபுரம், மார்ச் 12-
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் லோக்சபா பொது தேர்தல் 2019 நடத்தை விதிகள் தொடர்பாக தேர்தல் விளம்பரங்கள் அச்சிடும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அச்சக உரிமையாளர்களுடனான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் பேசியதாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் நாடாளுமன்ற மக்களவை பொது தேர்தல் 2019 தொடர்பான அறிவிப்பனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் மாதிரி நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப் பட்டுள்ளன. அதனடிப் படையில் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிகளுக் குட்பட்ட அச்சக உரிமையாளர்கள் தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் சார்பில் அச்சடிக்கப்படும் சுவரொட்டிகள்,துண்டு பிரசுரங்கள் ஆகியவற்றில் இடம் பெறும் வாசகங்கள் உள்ளிட்ட வைகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரின் அனுமதியை பெற்ற பின்னர் தான் அச்சிட வேண்டும். இது தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதி களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப் பட்டு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது,எனவே அச்சக உரிமையாளர்கள்,அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் மூலமாக விளம்பர துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் அச்சிடும் போது 1951 மக்கள் பிரதி நித்துவ சட்ட விதி 127ன் கீழ் அறிவுறுத்தியுள்ள படி விளம்பரம் வழங்கும் நபர்களின் பெயர், முகவரி, அச் சிடப்படும் தகவலின் விவரம் உள்ளிட்ட விரவங்களை உறுதி மொழி பத்திரமாகவும், தேர்தல் அலுவலரின் அனுமதி ஆகியவற்றை பெற்ற பின்னரே விளம்பரம் அச்சிட வேண்டும்.
தேர்தல் அலுவலரின் அனுமதியின்றி அச்சடிக்கும் பணிகளை மேற் கொள்ளக் கூடாது.மேலும் அச்சடிக்கப் படும் பிரதிகளின் எண்ணிக்கை, அளவு, கட்டண விபரம் (ரசீது நகல்) உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அச்சிடப் படும் விளம்பர மாதிரி ஆகியவற்றை தினந்தோறும் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பிட வேண்டும். அதே வேளையில் வாரம் ஒருமுறை அனைத்து விபரங்களையும் நகல்களாக அஞ்சல் மூலமாகவும் நேரடியாகவும் சமர்த்திட வேண்டும். இதில் வெளியிடுபவரின் பெயர், அச்சகத்தின் பெயர், தொலைபேசி எண் முகவரியுடன் குறிப்பிட வேண்டும்.
மேலும் சாதி மதம் இனம் உணர்வுகளை துண்டுகிற விதத்தில் சுவரொட்டிகள் துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கக் கூடாது. தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் நடைபெறும் செயல்களுக்கு திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள் உடந்தையாக இருந்தால் அவர்கள் மீது 1951ம் ஆண்டு மக்கள் பிரதி நிதித்துவ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.