சென்னை ஆக 30 –
சென்னை ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட கோவில் பதாகை பகுதியில் இன்று காலை உயிருக்கு போராடிய நிலையில் குரங்கு ஒன்று வலது காலில் அடிப்பட்டு குப்பைத் தொட்டியில் துடித்துக் கொண்டிருந்தது. அதுப்பற்றி விசாரித்த போது வெறி நாய் ஒன்று குரங்கினை துரத்தி அதன் வலது காலில் கடித்து குதறி பெரும் காயத்தை ஏற்படுத்தியது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மக்கள் தொண்டு செய்து வரும் பசுமை பூமி பவுண்டேசன் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் ஒன்று சேர்ந்து குரங்கினை குப்பைத் தொட்டியில் இருந்து மீட்டு அதற்கான தண்ணீர் மட்டும் ஆகாரங்களை வழங்கி விலங்குகள் சிகிச்சை மையத்திற்கு எடுத்தச் சென்று அதற்கான முதலுதவி சிகிச்சை அளித்து செங்குன்றம் பகுதியில் இயங்கி வரும் வனச் சரக அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று வனக் காவலர்களிடம் ஒப்படைத்தனர். அச்செயலை அறிந்த அப் பகுதி மக்கள் ரீகன் பெஞ்சமின் மற்றும் அந்தக் குழுவினரை பாராட்டினர்.