ஆலந்தூர், மே. 09 –
ஆலந்தூர் தொகுதி குன்றத்தூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று அதிமுக பூத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் கே.பி.ஏசுபாதம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாநில மகளிர் அணி செயலாளர் வளர்மதி, புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி பூத் கமிட்டி அமைப்பதற்கான புத்தகங்களை கிளைச் செயலாளர் களுக்கு வழங்கினர்.
மேலும், இதில் ஒன்றிய துணைச்செயலாளரும் கெருகை ஊராட்சி மன்ற தலைவருமான ஜெகதீஸ்வரி சுந்தரேசன், முன்னாள் ஒன்றிய சேர்மன் சுரேஷ்பாபு, மாணவரணி மாவட்ட செயலாளர் ஏ.என்.இ.பூபதி, கோவூர் குமாரசாமி, தரப்பாக்கம் புஷ்பராஜ், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.




















