திருவள்ளூர்,ஜூலை-14,
சென்னை ,குமணன் சாவடி கோசா தெருவில் வசித்து வரும் சிவராமன் என்பவரின் மனைவி 30 வயதுடைய சந்தியா என்பவர், திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவன் மீதும் மாமியார் மீதும் புகார் மனு அளித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை வைத்துள்ளார்.அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளதாவது, தனக்கும் சிவராமனுக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி திருமணம் நடைப்பெற்றது. அதன் பிறகு ஒரு சில மாதங்களுக்கு பின்பு தனது கணவனும் மாமியாரும் கட்டாயப்படுத்தி வேலைக்கு அனுப்பினார்கள், எனது வருவாயில் தனது கணவன் இரண்டு வீடுகளை அவர் பெயரிலயே வாங்கிவுள்ளார். அது குறித்துக் நான் அவரிடம் கேட்ட போது, தன்னை கட்டிலில் இருந்து எட்டி உதைத்தார் . நிலை தடுமாறி கீழே விழுந்த தனக்கு முதுகு தண்டில் அடிப்பட்ட போதும் மாமியாரும் கணவனும் மீண்டும் அடித்த தாகவும், அதனால் உடல் நிலை சரியில்லாமல் போக சிகிச்சைப் பெற்று அதன் பிறகு தனது அம்மா வீட்டிற்கு சென்றதாகவும், பின்பு தனது கணவர் எனது அம்மா வீட்டிற்கு வந்து தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த நிலையில் 4 நாட்களுக்கு பின்பு மீண்டும் குடித்து விட்டு வந்து தனது தாலியை கழட்டி தரும்படி கட்டாயப்படுத்தினார். தர மறுத்தால் தனை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி தலையணையால் முகத்தில் அழுத்தி கொலை செய்ய முயற்சி செய்தார் என இவ்வாறுஅவரது புகாரில் தெரிவித்துள்ளார்.