கும்பகோணம், மார்ச். 03 –

கும்பகோணம் மாநகராட்சி 48 வார்டுகளை உள்ளடக்கி தரம் உயர்த்தப்பட்ட பின்பு நடைபெற்ற முதல் தேர்தலில் கும்பகோணம் மாநகராட்சின் முதல் மேயர் யார் என்ற கேள்வியும், தனது கட்சிதான் முதல் மேயர் பதவியை பெறவேண்டும் என்ற கடும் போட்டியுடனும், எதிர்பார்ப்புடனும் திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவி அதற்கான உத்வேகத்துடன் இருக்கட்சி தொண்டர்களும் தேர்தல் களம் கண்டனர்.

  இதனிடையே நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் 37 வெற்றி பெற்றுள்ளனர்.  இதனால் மாநகராட்சியின் முதல் மேயர் ஆகும் வாய்ப்பு திமுகவை சேர்ந்த மாநகர செயலாளர் சுப தமிழழகனுக்கே என்று திமுகவினரால் பரவலாக பேசி வந்த நிலையில், திடீர் திருப்பமாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸிற்கு மாநகராட்சி ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

  கும்பகோணம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக காங்கிரசை சேர்ந்த இரண்டு பேர் மட்டுமே வெற்றி பெற்று உள்ளனர். ஒருவர் கவிஞர் ச.அய்யப்பன் வயது 70 இவர் தற்போது தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளராக உள்ளார். பெருந்தலைவர் காமராஜர் மீது பற்று கொண்டவர் இவர் கடந்த 1965 முதல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக உள்ளார். இவர் தற்போது தாராசுரம் பாலாஜி நகரில் வசித்து வருகிறார்.  முதல் முறையாக 14வது வார்டு மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

  இதேபோன்று 17வது வார்டு மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் க.சரவணன் வயது 42 கும்பகோண மாநகர காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக இருக்கிறார். 20 ஆண்டு காலமாக ஆட்டோ ஓட்டுனரான இவர் துக்காம்பளயத் தெருவில் வசித்து வருகிறார். மாமன்ற உறுப்பினராக முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இவர் நீண்ட கால காங்கிரஸ் தொண்டர் ஆவார். இவருக்கு தேவி கும்பகோணம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்பு நடைபெற்ற முதல் தேர்தலில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் 37 வெற்றி பெற்றுள்ளனர் இதனால் மாநகராட்சியின் முதல் மேயர் ஆகும் வாய்ப்பு திமுகவை சேர்ந்த மாநகர செயலாளர் சுப தமிழழகனுக்கே என்று திமுகவினரால் பரவலாக பேசி வந்த நிலையில் திடீர் திருப்பமாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸிற்கு மாநகராட்சி ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது

  கும்பகோணம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக காங்கிரசை சேர்ந்த இரண்டு பேர் மட்டுமே வெற்றி பெற்று உள்ளனர். ஒருவர் கவிஞர் ச.அய்யப்பன் வயது 70 இவர் தற்போது தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளராக உள்ளார். பெருந்தலைவர் காமராஜர் மீது பற்று கொண்டவர் இவர் கடந்த 1965 முதல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக உள்ளார்  இவர் தற்போது தாராசுரம் பாலாஜி நகரில் வசித்து வருகிறார்  முதல்முறையாக 14வது வார்டு மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்

  இதேபோன்று 17வது வார்டு மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் க.சரவணன் வயது 42 கும்பகோண மாநகர காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக இருக்கிறார் 20 ஆண்டு காலமாக ஆட்டோ ஓட்டுனரான இவர் துக்காம்பளயத்தெருவில் வசித்து வருகிறார் மாமன்ற உறுப்பினராக முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இவர் நீண்ட கால காங்கிரஸ் தொண்டர் ஆவார் இவரது மனைவி தேவி வயது 35 என்ற மனைவியும் மூன்று மகன்களும் உள்ளனர்.

நாளை நடைபெறும் மேயர் மற்றும் துணைமேயர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலில்தான் மேயராக யார் மற்றும் எந்த கட்சியை சார்ந்தவர் வருகிறார்கள் என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரிய வரும். பொழுது விடிந்தால் புதிர் விலகும் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள கும்பகோணம் மாநராட்சியின் முதல் மேயர் யார் என்ற விடை தெரியும் …

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here