கும்பகோணம், பிப். 25 –

அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் நல சங்கம் சார்பில் தங்களுக்கு  74 மாத காலமாக அகவிலைப்படி உயர்த்தாததை கண்டித்தும் நிலுவையில் உள்ள பணப் பயன்களை உடனே வழங்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

  தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்களில் தலைமை அரசு போக்குவரத்து கழக கோட்டம் முன்பு  திருச்சி கரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் புதுக்கோட்டை காரைக்குடி கும்பகோணம் மண்டலங்கள் அடங்கும் இங்கும் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு 74 மாத காலமாக அகவிலைப்படி உயர்த்தாததை கண்டித்தும் நிலுவையில் உள்ள பணப் பயன்களை உடனே வழங்க வேண்டியும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை நிறைந்த அமல்படுத்தவும் 2020 மே முதல் விருப்ப ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு  ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனே வழங்கிட வேண்டும் மாதம் முதல் தேதியிலே ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் பணியில் உள்ள தொழிலாளர்களின் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக பேசி தீர்க்க வேண்டும் கடந்த 8 ஆண்டுகளாக  பண பயன்கள் கிடைக்காத நிலையில் கடந்த ஆட்சியில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் எந்த பயனும் ஏற்படாது நிலையில் தற்போது அமைந்துள்ள திமுக ஆட்சியிலாவது தங்களுக்கு பணப் பயன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர்.

  திமுக ஆட்சி அமைத்து 9 மாத காலமாகியும் எந்த ஒரு பண பயனும் கிடைக்காததால்  இன்று ஓய்வு பெற்ற ஊழியர்கள் நலச்சங்கத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கோட்ட தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு போக்குவரத்து அலுவலகம் முன்பு பெரிய இரும்பு தடுப்புகளை அமைத்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் அசோகன் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

   கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக கோட்ட தலைமை அலுவலகம் அமைந்துள்ள பிரதான சாலை  முற்றுகை போராட்டத்திற்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் காவல்துறையினர் வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here