கும்பகோணம், பிப். 10 –
கும்பகோணத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் 12வது வார்டில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் உறுதி செய்யப்பட்டு 48 வார்டுகளில் மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு திமுக அதிமுக அமமுக நாம் தமிழர் கட்சி மக்கள் நீதி மையம் மற்றும் சுயேச்சைகள் உள்பட 275 வேட்பாளர்கள் களத்தில் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இன்னும் சில தினங்களே தேர்தலுக்கு எஞ்சியுள்ளதால் தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு வகையான நூதன பிரச்சாரங்களில் ஈடுபட்டு வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 12 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் கேவிபிஆர் சந்தோஷ்குமார் ஆழ்வான் கோவில் தெருவில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியாக வந்த அரசு தலைமை கொறடா கோவி செழியனிடம் வேட்பாளர் கேவிபிஆர் சந்தோஷ்குமார் வாழ்த்துக்களும் ஆசியும் பெற்றார். இதில் வார்டு செயலாளர் சங்கர் மற்றும் திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.























