திருவள்ளூர், மே. 15 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…

திருவள்ளூர் மாவட்டம், காப்புக்காட்டில் இருந்து தண்ணீர் தேடி வந்த புள்ளி மானை  தெரு நாய்கள் துரத்திக் சென்று கடித்தப் போது பொதுமக்கள் புள்ளி மானே காப்பாற்றி வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவாலங்காடு அடுத்த மணவூர் காபுல் கண்டிகை காப்புக்காடு வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி பொண் புள்ளி மான் வயது (3) தண்ணீர் தேடி அருகில் உள்ள பொன்னாத்தம்மன் குளத்திற்கு தண்ணீர் குடிக்க சென்ற போது, அப்பகுதியில் இருந்த தெரு நாய்கள் புள்ளி மானை துரத்தி கடித்ததால் மான் பின்பக்க்க் கால் பலத்த காயமடைந்துள்ளது.

அதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தெருநாய்களைக் துரத்தி விட்டு திருவாலங்காடு காவல்துறையினருக்கும், வனத்துறைக்கும் தகவல் அளித்துள்ளனர்.

அத்தகவலிறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் காயம் பட்டிருந்த புள்ளி மானை மீட்டுக் அருகில்‌ உள்ள திருவாலங்காடு கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here