ஆரணி, ஜூன். 23 –

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரணி பேரூராட்சியில் அரசு மகளிர் மேல்நிலைபள்ளி இயங்கி வருகிறது. இதில் சுமார் 1200க்கும் மேற்பட்ட மாணவிர்கள் ஆறாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்புவரை கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இப்பள்ளியில் மாணவர்களுக்கான போதுமான கழிப்பிட வசதிகள் இல்லாத நிலையில், ரோட்டரி கிளப் சென்னை மற்றும் நாடி டெக்னாலஜி இணைந்து சமூக பங்களிப்பு நிதி மூலம் ரூபாய் 21 லட்சம் மதிப்பிலான இரண்டு கழிப்பறைகள் மற்றும் 50 – க்கும் மேற்பட்ட மாணவியர்கள் அமரக்கூடிய இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் காவிரி தலைமை தாங்கினார், மேலும் இந்நிகழ்வில் ரோட்டரி  மெட்ராஸ் பிரசிடெண்ட்  ஜெயஸ்ரீ  ஸ்ரீதர். நாடி கம்பெனியின் மேனேஜிங் டைரக்டர் கபர் . மாதவரம் ரோட்டரி கிளப் பிரசிடெண்ட் ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக வருகைத் தந்தனர்.

மேலும் பெற்றோர் ஆசிரியர்கழக பொருளாளர் சீனிவாசன். முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ஹேமபூஷணம். நகரச் செயலாளர் முத்து. தியாகராஜா கல்லூரியின் முன்னாள் பேராசிரியர்  ரவி. சமூக ஆர்வலர் கருணாகரன் . பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள்.  ஆசிரியர்கள் மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய ரோட்டரி கிளப் நிர்வாகிகள் வருங்காலங்களில் பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதன்மை பெரும் மாணவிகளுக்கு மேல்நிலைப் படிப்பை அவர்கள் தொடர அனைத்தும் இலவசமாக அவர்களுக்கு வழங்கப்படும் என அப்போது அவர்கள் உறுதி அளித்தனர்.

தொடர்ந்து இவ்விழாவில் மாணவ மாணவியர்களின் கண் கவரும் பரதநாட்டியம் மற்றும் சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது. விழாவின் முடிவில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் நன்றி உரையாற்றினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here