திருவாரூர், செப். 12 –
உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மனநல நல்லாதரவு மன்ற அமைப்பினர் துவக்கி வைத்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
இவ்விழாவானது திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இதுப்போன்ற விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
இந்தியாவிலேயே தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமான அளவில் தமிழ்நாட்டில் உள்ளதாகவும், அதைத் தடுப்பதற்கான முக்கியத்துவத்தை நாம் உணர்ந்ததால்தான் தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இந்த விழிப்புணர்வு கருத்தரங்கானது நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற இந்த கருத்து அரங்கில் மருத்துவ கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ் இவ்விழாவில் பங்கேற்று கருத்துக்களை பகிர்ந்து கொண்ட மருத்துவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் இக் கருத்தரங்கத்தில் டாக்டர் சூரியமூர்த்தி மனம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கருத்தரங்கினை பயிற்சியாக வழங்கினார். இந்த நிகழ்வில் மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


















