திருவண்ணாமலை, ஆக.4-

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியம் ஊர்கவுண்டனூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் டி.ஏழுமலை மற்றும் வார்டுகள் உறுப்பினர்கள் சி.இந்திராணி, கே.பரசுராமன், ஆர்.ஜெயலட்சுமி, எஸ்.மோகனா, டி.கிருஷ்ணன் ஆகியோர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியம் ஊர்கவுண்டனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் இரா.கோவிந்தராஜ்,  ஊராட்சி மன்ற கூட்டங்கள் எதுவும் நடத்தாமலும், தீர்மானங்கள் இயற்றாமலும், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் வார்டுகள் உறுப்பினர்கள் ஒப்புதல் இல்லாமலும் ஊராட்சி நிதியில் பல்வேறு முறைகேடுகளை செய்து வருகிறார். அதேபோல் ஊராட்சி செயலாளர் மற்றும் பணிதள பொறுப்பாளர்களை பயன்படுத்தாமல் 100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகளிலும் நடைபெற்றுள்ளது.  

மேலும் ஊர்கவுண்டனூர் ஊராட்சியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் குடிநீர் வழங்க வீடுகளுக்கு பைப்லைன் பதிக்க அந்தந்த வீட்டின் உரிமையாளரே பள்ளம் தோண்ட சொல்லி பொதுமக்களின் வீடுகளுக்கு பைப்லைன் பதிக்க பள்ளம் தோண்டியுள்ளனர். இதில் தரமான பைப்புகளை பதிக்காமல் மிகவும் தரம் குறைந்த பைப்புகள் பதிக்கப்பட்டு உள்ளது. ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் வார்டுகள் உறுப்பினர்களிடம் எந்த அனுமதியும் வாங்காமல் ஊராட்சி மன்ற தலைவர் தன்னிச்சையாக செயல்படுகிறார்.  ஊராட்சியில் உள்ள குக்கிரமாங்களில் அடிப்படை தேவைகள் மற்றும் அத்தியாவசிய குடிநீர் பணிகள் மேற்கொள்ளாமல் அரசு விதிமுறைகளுக்கு முரனாக ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கையெழுத்தை தானே இட்டு அவர் ஊராட்சி நிதியை தவறான வழியில் செலவிட்டு பல்வேறு முறை கேடுகளில் ஈடுபட்ட உள்ளார்.

ஊராட்சி மன்ற கூட்டம் நடத்தாமல் ஊராட்சி நிதி மற்றும் 100 நாள் திட்டங்களில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதால் ஊராட்சி மன்றத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் படி ஊராட்சி மன்றத் தலைவரை பதவி நீக்கம் செய்து நிதி முறைகேடுகளுக்காக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மனுவை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here