வந்தவாசி, அக்.9-
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை பேரிடர் காலத்தில் பொதுமக்கள் காப்பது குறித்த அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் பெருமாள் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்டால் எப்படி காப்பாற்றுவது தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது உணவு ஏற்பாடு செய்வது குடிசை வாழ் மக்களை கண்டறிந்து உதவுவது உள்ளிட்ட பணிகளை செய்யும் வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் (தணிக்கை) ராஜேந்திரன், வந்தவாசி காவல்நிலைய ஆய்வாளர் சோனியா, வந்தவாசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏ.பி.வெங்கடேசன், ராஜன்பாபு மற்றும் வருவாய்த்துறை பொதுப்பணித்துறை மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.