மதுரவாயல், ஏப். 19 –

நேற்று, திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக நடைப்பெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் திட்ம் மற்றும் வட்டார அளவிலான சுகாதாரத்திருவிழவினை திருப்பெரும்பதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் துவக்கி வைத்துப் பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய டி.ஆர் பாலு எம்.பி தொலைதூர கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு தாய் சேய் நலம், தொற்றா நோய்களான புற்றுநோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்கள் வயது முதிர்வினால் ஏற்படும் நோய்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளிலயே வட்டாரத்திற்கு ஒரு முகாம் வீதம் முதல்வரின் உத்தரவுப்படி சுகாதார திருவிழா நடத்தப்படுகின்றன. அச்சுகாதார திருவிழாவில் வரும் அறுவைச் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டின் கீழ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

இச்சுகாதார திருவிழா மூலம், அதிநவீன பரிசோதனை சாதன வசதிகள் கிராம மக்களுக்கு கிடைக்கச் செய்வதையும், நோய் கண்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதையும், அதனைத் தொடர்ந்து பரிந்துரையின் பேரில் தொடர் நடவடிக்கை எடுப்பதையும் மற்றும் சுகாதார விழிப்புணர்வு கல்வி வாயிலாக மக்கள் நல்வாழ்வை மேம்படுத்துவதையும் குறுக்கோளாகக் கொண்டுள்ளது.

இந்த வட்டார சுகாதாரத் திருவிழாவிற்கு ஒரு முகாமிற்கு ஒரு லட்சம் வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இத்திருவிழா சிறப்பு முகாமில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பட்டியிலினப்பட்ட மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவ அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்று சிகிச்சை அளிக்கப்படவுள்ளனர்.

இச்சிறப்பு முகாமில் சிறப்பு மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட நோயாளிகள் அவரவர் விருப்பத்தின் பேரில் பட்டியலிடப்பட்ட மருத்துவ மனைகளில் உயர் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். அதுப்போன்று மேல்பரிந்துரை செய்யப்பட்ட நோயாளிகளில் சிகிச்சை நிலை, தொடர் நடவடிக்கை நிலவரங்கள், அதுதொடர்பான வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் அந்தந்த அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பராமரிக்கஃப்படுகறிது. இச்சுகாதார திருவிழா முகாம்கள் குறித் தகவல்கள் முகாம் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஊராட்சித்தலைவர், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், பேரூராட்சி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோருக்கு முகாம் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. இச்சுகாதார திருவிழா முகாமில் தாய் சேய் நலம், சிறப்பு பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, புற்று நோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை, கண் மருத்துவம், மன ந்நல மருத்துவம், இந்திய முறை மருத்துவம், பல் மருத்துவம், ஐசிடிசி சேவைகள் ஆகியன செயல்படுத்தப்படுகின்றன. சிறப்பு மருத்துவ பிரிவுகளாகும் . இச்சுகாதார திருவிழாவில் சிகிச்சைக்காக வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு அம்முகாம்களிலேயே மருத்துவ சான்றிதழ் வழங்கி மாவட்ட மறுவாழ்வு அலுவலரால் அடையாள அட்டை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது மேலும், இம்முகாமில் கர்ப்பக்கால பரிசோதனைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு முழு பேறு கால பரிசோதனை மற்றும் தடுப்பூசி வழங்கப்படுவதுடன் தாய் சேய் நல விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித்திட்டத்தின் கீழ் நிதி பெற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இச்சுகாதார திருவிழாவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை பள்ளிக் கல்வித்துறை, செய்திமக்கள் தொடர்புத்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை, ஆகிய துறைகளும் கலந்துக்கொண்டனர். இச்சுகாதார திருவிழாவை வானகரம் பகுதியில் சிறப்பான முறையில் நடைப்பெற ஏற்பாடு செய்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கும், மற்றும் பால்வளத்துறை அமைச்சருக்கும் மேலும் மருத்துவ துறை சார்ந்த அலுவலர்களுக்கும் தனது பாரட்டையும் வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.

இந்நிகழ்வில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசு முதன்மை செயலாளர் மரு.ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி, பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறை இயக்குநர் மரு.செல்வவிநாயகம், சுகாதாரப்பணி இணை இயக்குநர் மரு.எம்.ஏ.இளங்கோவன், சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் திருவள்ளூர் மரு.கே.ஆர். ஜவஹர்லால், பூவிருந்தவல்லி மரு. செந்தில்குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள்,செவிலியர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here