கும்பகோணம், பிப். 10 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரில் உள்ள காந்தி பூங்கா முன்பு இன்று வ உ சிதம்பரம் பிள்ளை குறித்து அவதூறாக பேசிய நீலகிரி மக்களவை தொகுதி உறுப்பினரும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசாவை கண்டித்து, வ.உ.சி பிள்ளை சங்கம் மற்றும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீலகிரியில் நடைப்பெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கம் பொதுக்கூட்டத்தில், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக செக்கிழுத்த செம்மல் தியாகி வ உ சிதம்பரம் பிள்ளை குறித்து சர்ச்சைக்குள்ளான வகையில் பேசிய நீலகிரி மக்களவை தொகுதி உறுப்பினரும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசாவை பேசியதாக கூறப்படுகிறது.

அதனைக் கண்டித்து கும்பகோணம் காந்திப் பூங்கா முன்பு  வ..உ..சிதம்பரனார் பிள்ளை சங்கம் மற்றும் வெள்ளாளர் முன்னேற்ற  கழகம் சார்பில், வ உ சிதம்பனார் பிள்ளை தலைவர் பாலமுருகேசன், தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் பாண்டியராஜன், அமைப்பாளர் ராஜா, துணைத் தலைவர் பாண்டியன், வர்த்தக அணி செயலாளர் பாலகணேஷ், இளைஞர் அணி தலைவர் சீனிவாசன் பிள்ளை, புறநகர் மாவட்ட செயலாளர் பிரதாப் பிள்ளை, ஒன்றிய இளைஞரணி பொருளாளர் துரை மாணிக்கம், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்டவர்களும், மேலும் அவ்வின பெருமக்கள் திரளானவர்கள் பங்கேற்று ஆ ராசாவுக்கு எதிராக கண்டனம் முழக்கங்களை எழுப்பினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here